2024 சித்திரை பட்ட விதை தொகுப்பு


சித்திரை பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற விதைகளின் தொகுப்பு 
summer combo pack for gardeners

🌱🌱🌱🌱

விதைகளின் பட்டியல்: 
•நாட்டு தக்காளி
•நாட்டுகத்தரி
•சம்பா மிளகாய்
•நாட்டு வெண்டை
•முள்ளங்கி
•காராமணி
•கொத்தவரை
•குட்டைபீர்க்கன்
•மிதிபாகல்
•பாகல்
•குட்டைபுடலை
•வெள்ளரி
•புளிச்சைகீரை
•வெந்தயக்கீரை
•அரைக்கீரை
•சிறுகீரை
•தண்டுகீரை
•பாலக்கீரை
•அகத்திகீரை
•முருங்கை
•திருநீற்றுபச்சிலை
•சங்கு பூ
•செடி அவரை
•செடி பீன்ஸ்
•சுக்காங்கீரை

25 ரகமான விதைகள் அடங்கிய விதை தொகுப்பு கொரியர் செலவுடன் 300₹. விதை தொகுப்பு பெறுவதற்கு 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். அல்லது www.aadhiyagai.co.in என்ற வெப்சைட்டிலும் பெறலாம். 

விதைகளை தண்ணீர் தேங்காத, நல்ல வடிகால்வசதியுள்ள மண்ணில் பயிரிடுவது அவசியம்.  விதைகளுடன் விதைப்பும் பராமரிப்பும் சார்ந்த குறிப்புகளும் கிடைக்கும். அந்த குறிப்புகளில் உள்ளபடி விதைகளை நீர் அல்லது பால், பஞ்சகவ்யம் போன்று எதாவது ஒன்றில் ஊறவைத்து மாலை வேளைகளில் வெயில் குறைந்தவுடன் விதைப்பு செய்யலாம். 

நன்றி 🌱🌱🌱🌱
Aadhiyagai Seedsavers Farm 
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்   

•வெயில்காலத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்கும்போது தோட்டத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டும் .

•காய்கறி பயிர்களின் ஊடாக உயரமாக வளரும் துவரை, மக்கோசோளம், சூரியகாந்தி,ஆமணக்கு போன்ற பயிர்களையும், முருங்கை, அகத்தி போன்ற மரக்கீரைகளையும், அரளி,செம்பருத்தி போன்று உயரமாக வளரும் பூச்செடிகளையும் நிழல்களை ஏற்படுத்துவதற்காக வளர்க்கலாம். இவை பசுமையான நிழல்வலைகளாக செயல்படும். 

• மாடித்தோட்டத்தில் தொட்டிகளை சற்று நெருக்கமாக வைத்து செடிகளை வளர்க்கும்போது மாடியில் வெப்பத்தின் தாக்கம் குறையும்.

• கீரைகளை தனியாக பயிரிடாமல்  காய்கறி பயிர்களுக்கு இடையிடையே வளர்க்கும்போது கீரைகளுக்கு வெயிலின் தாக்கம் குறையும். 

• செடி காய்கறிகளுக்கு இடையிடையே கொடி காய்கறிகளுக்கு பந்தல் அமைத்து வளர்க்கும்போது செடி காய்கறிகளுக்கு வெயிலின் தாக்கம் சற்று குறையும்.

• தொட்டிகளிலும், நிலத்திலும் மூடாக்கு இடுவதன் மூலமும் மண்ணின் வெப்பத்தை குறைக்கவும் மண்ணின் ஈரம் குறைவதையும் தடுக்க இயலும்.

• காலை, மாலை இரண்டு வேலைகளிலும் தண்ணீரை சீராக வழங்குவதன் மூலம் செடிகளுக்கு சரியான ஈரப்பதமும், வெப்பத்தின் தாக்கமும் குறையும். 

•மாடித்தோட்டத்தில் தரைபகுதிக்கும் நன்கு தண்ணீர் விடலாம். வெப்பத்தை குறைக்கும். இலைகளுக்கும் தண்ணீர் தெளிக்கலாம்.( பூக்கள் இருக்கும் போது கவனம்)

• தாவரங்களுக்கு வறட்சியை தாங்கி வளர்வதற்காக சிறிதளவு சாம்பலை தண்ணீரில் கலந்து மண்ணிற்கு வழங்கலாம்.(1லி தண்ணீருக்கு 5-10கிராம் அளவு சாம்பல்).  மீன் அமிலமும் அவ்வபோது தெளித்து விடலாம்.. (10 நாட்களுக்கு ஒருமுறை -1லி தண்ணீருக்கு 30மிலி மீன் அமிலம் )

• மாடித்தோட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பின் பழைய சேலைகளை நிழலுக்காக கட்டிவிடலாம். நிழல்வலைகள் மேற்பகுதியில் மட்டும் உச்சிவெயிலின் தாக்கத்திலிருந்து காக்க கட்டிவிடலாம். அதே சமயம் நல்ல காற்றோட்டமாக தோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

• பறவைகளுக்கு தண்ணீர் வைக்கலாம். தானியங்களை தூவிவிடலாம். பறவைகள் தோட்டத்திலுள்ள புழு பூச்சிகளையும் உணவாக்கிக்கொள்ளும்.. 

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

•வேளாண்குடிமக்களின் பாரம்பரிய அறிவை அனைவரிடமும் கொண்டு செல்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி.. 

இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட..

•www.aadhiyagai.co.in
•WhatsApp: +918526366796
•Whatsapp community: https://chat.whatsapp.com/EyIVmgYgCH6G5m1pMZzSPU

•Telegram: https://t.me/aadhiyagai

•Instagram @aadhiyagai_seedsavers, @aadhiyagai_paramez

•Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm
💛💛💛

Paramez Aadhiyagai

#seeds #விதை #நாட்டுவிதை #மரபுவிதை #பாரம்பரியவிதை #வீட்டுத்தோட்டவிதை #மாடித்தோட்டவிதை #traditionalseeds #heirloomseeds #nativeseeds #desiseeds #heritageseeds

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY