Posts

Showing posts from December, 2016

இயற்கை வழி விவசாயம்

Image
பரமுவின் முதல் கட்டுரை: 2014 நவம்பரில் எழுதியது..  தமிழில் எழுதி கொடுத்த முகநூல் நண்பர் Vasuki_vm அவர்களுக்கு நன்றி இயற்கை வழி விவசாயம் இது வானத்தை வில்லாக வளைக்கிற கற்பனை வேலையோ... தலைய சுத்தி காத தொடற கடினமான விசயமோ.. வசதி படைதவர்கள் செய்யும் விவசாய முறையோ.. சரியாய் செய்ய வேண்டிய அறிவியல் கோட்பாடுகளோ கணித சூத்திரங்களோ... படித்து கற்றுக்கொண்டோ, முழுவதுமாய் தெரிந்து கொண்டு செய்யும் விசயமோ... புகாகோ, நம்மாழ்வார், பாலேக்கர் போன்றவர்களின் வழிமுறைபடி தான் செய்ய வேண்டுமோ என்ற கட்டாயமான விசயமோ.. இயற்கை இடுபொருட்கள் என்று சொல்லும் மண்புழு உரம் தொடங்கி, அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா என்று பெயர் தெரியாத பொருட்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமான விவசாய முறையோ இல்லை....! இல்லை....! இல்லை...! அன்பான விவசாய நண்பனே..! நீ யாரையேனும் பின்பற்றி தான் இயற்கைவழி விவசாயம் செய்ய வேண்டுமென்று இல்லை..! மேலே சொன்ன விஷயங்களை தாண்டியது தான் இயற்கை வழி விவசாயம்.. நம்புவது சிறிது கடினம் தான்.. உரம்,பூச்சிகொல்லி, களைக்கொல்லி இவை எல்லாம் இருந்தால் தான் விவசாயம் சாத்தியம் என்று நம் முன்னோர்களை நம்ப வை...

மரபு ரக பூசணி விதை சேகரிப்பு வீட்டுத்தோட்ட நண்பரிடமிருந்து..

Image
நாட்டு விதை சேகரிப்பில், விதை கொடுத்து உதவிய பெரும்பங்கு வீட்டுத்தோட்ட நண்பர்களையே சேரும்.. விதை வங்கிகளோ, விதை பாதுகாப்பவர்களோ பெரிதாக தேவையில்லை எனும் ஒரு சூழல் உள்ளது. தன் குடும்பத்தற்கு தேவையான உணவென்றால் "" #நாட்டு_விதை #நஞ்சில்லா_உணவு"" என்ற எண்ணத்தை கொண்டு விவசாயம் செய்யும் சூழலே நான் கூறுவது.. அவ்வாறு தன் வீட்டு உணவிற்காக பயிரிட்டதில் கிடைத்த ஒரு மரபு ரக பூசணிக்காய் தனது வித்துகளுடன் கம்பீரமாய் அமர்ந்துள்ளது.. வீட்டுத்தோட்ட நண்பர் வித்யா மோகன் அவர்களின் வீட்டுத்தோட்டத்திலிருந்து இந்த படம்...

ஒரு மாத கால வீட்டுத்தோட்டம் சார்ந்த இணையதள பயிற்சி

Image
#LEARN_FIRST இணையதளம் மூலமாக ஒரு மாத கால வீட்டுத்தோட்ட வகுப்புகள்.. என் வீட்டிற்கு தேவையான உணவை நானே உற்பத்தி செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்கான அடிப்படையான விசயங்கள் ஏதும் தெரிவதில்லை..என நினைக்கும் நண்பர்களுக்காக..  இரண்டு வருடங்களாக தோட்டம் அமைப்பதில் நாங்கள் கற்ற விசயத்தை  ஒரு மாத பயிற்சியாக கற்றுத்தருகிறோம். இந்த பயிற்சி வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களை பயிற்றுனர்களாகவே மாற்றி விடுகிறது. நீங்கள் உங்களுக்காக தோட்டம் அமைத்திருந்தாலோ, மற்றவர்களுக்கு தோட்டம் அமைத்து தரும் வேலையை செய்து வருபவர்களாகவோ இருக்கலாம்.. அடிப்படையான விசயங்களை  கற்றுக்கொண்டு செயல்படுங்கள்.. செயல்படுத்துங்கள்.. வாட்ஸ்அப் மூலம் வகுப்புகளை பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 20 அன்று பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. கலந்துரையாடலும் சில வீட்டுப்பாடங்களுமாக கூட பயிற்சிகள் இருக்கும். நோக்கம் ஒன்று தான்.. 400சதுர அடி இடப்பரப்பு 4,5பேர் உறுப்பினர்களாக கொண்ட குடும்பத்தின் காய்கறி தேவையை பூர்த்தி செய்திடும் என்று அனைவரும் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்.. பயிற்சி காலத்திலேயே உங்களுக...

மிருதுவான பற்பொடி

Image
ஓர் சிறந்த #பல்பொடி இன்னிக்கு காலையில பக்கத்து தோட்டத்து ஐயாவை பார்க்க போயிருந்தப்ப வரப்புல ஏதோ தேடீட்டு இருந்தாரு.. என்னங்க ஐயா தேடறீங்கன்னு கேட்டேன்.. பல்லு வெளக்குனா ஈறுல இரத்தமா வருது சாமி..அதான் எறும்பு குழியை தேடறேன்னு சொன்னாரு.. ஒரு எறும்பு குழியை தேடி பிடிச்சு அந்த குழியை சுத்தி இருந்த மண்ணை எடுத்து பல்லு வெளக்கீட்டு வந்தவரு சொன்னாரு, நானும் ஊரெல்லாம் தேடி எது எதுலயோ பல்லு வெளக்கி பார்த்தேன்..பல்லுல விரல் பட்டாவே இரத்தம் வந்துரும். இல்லை குச்சி வச்சு பல்லு வெளக்குனாலும் இரத்தம் வரும். கொஞ்ச நாளா #ஆலம்விழுதுல பல்லு வெளக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் இந்த எறும்பு குழி மண்ணுல வெளக்குறேன்.. அருமையா இருக்குதுன்னு சொன்னாரு.. சாதாரணமா செங்கல்லை இடிச்சு வெளக்குவோம், இல்லைனா தோட்டத்துல மண்ணை எடுத்து பல்லு வெளக்குவோம். ஆனால் இந்த எறும்பு குழி மண்ணு அவ்ளோ அருமையா இருக்கு..  #softest_tooth_powder #way_to_self_sustainable