Posts

Showing posts from February, 2017

கத்தரி விதை எடுத்து வைப்பதற்கான ஒரு நுட்பம்

Image
கத்தரி விதை எடுத்து வைப்பதற்கான ஒரு நுட்பம் கத்தரி காயிலிருந்து நன்கு பழுத்து பழமான பின்பு எந்த வண்ண கத்தரியாக இருந்தாலும் மஞ்சள் வண்ண பழமாகி விடும். நன்கு அடர்த்தியான மஞ்சள் நிறத்திற்கு மாறிய பின்பு, அந்த பழத்தின் மேல் காம்புடன் மேல்பகுதி பழத்தை அறுத்துவிட்டு இரண்டாக வெட்டி அதனுள் சாம்பலை தூவி, காயை வைத்துவிடலாம். உச்சி வெயிலில் மட்டும் விதையை காய வைக்க கூடாது. இரவில் கூட காய வைக்கலாம். ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் கூட இவ்வாறு விதைகளை இரவு பகலாக காய வைக்கலாம்.  இன்னொரு முறையில், விதைகளை பழத்திலிருந்து எடுத்து சாம்பல் கலந்து காய வைக்கலாம். பழத்தை சமைப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். விதைகளை காயவைத்து பின் பாதுகாப்பாக எடுத்து வைக்கலாம். விதைகளை சேமிக்கும்போது ஒரு குறிப்பு எழுதி பாதுகாப்பது அவசியம்.  1.என்ன விதை 2.எந்த ரகம் 3.என்ன தேதியில் சேமிக்கப்பட்டது. 4.என்ன விதை நேர்த்தி செய்யப்பட்டது வீட்டுத்தோட்ட விதைவங்கி  ஜேம்ஸா-மானாமதுரை மேற்கூறிய குறிப்புகளுடன் விதைகளை பாதுகாப்பாக வைக்கலாம்.  நன்றி.. பரமு 28/2/17

கிராமம் தோறும் துவங்குவோம் விதை வங்கிகளை

Image
தூத்துக்குடி விருதுநகரில் துவங்கியாயிற்று விதை வங்கி.. நான் சேகரித்த விதைகளையும் கொடுத்துள்ளேன். அந்த பகுதியை சார்ந்த நண்பர்கள் தங்களிடம் ஏதேனும் மரபு விதைகள் வைத்திருந்தால் உங்கள் பகுதியில் உள்ள விதை வங்கியிலேயே விதைகளை பாதுகாப்பு செய்யலாம்.. விதைகளை வாங்கலாம்..கொடுக்கலாம்.. இதுபோன்ற மரபு விதைகளை கிராமம் தோறும் துவங்க வேண்டும்..விதை வங்கிகள் இனி ஊர் தோறும் இருக்க வேண்டும்.. முயற்சிக்கு தலைவணங்குகிறோம் .

யோசி அல்லது யாசி

யோசி அல்லது யாசி வறட்சியான இடங்களில் ஓரளவு தண்ணீர் இருக்கும் விவசாயிகள் தீவனத்திற்காக சோளம் விதைத்து உள்ளூர் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்காக தீவனம் கொடுக்கலாம்.. இந்த வறட்சி சூழலில் சுய உணவு, சொந்த கால்நடைகளுக்கு தீவன பயிர் என பயிர் செய்யாது பணப்பயிர் செய்திடுவதற்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்..என்பது ஆழ்மனதின் எண்ணம்.. 5ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்த செலவு-30,000₹ வறட்சியால் பருத்தியில் வருவாய் - 3000₹ வெளியூரிலிருந்து 2மாடுகளுக்கு தீவன செலவு- 35,000₹ சுய உணவுக்காக பயிர் செய்யாது கடைகளில் கம்பு சோளம் காய்கறி என வாங்கிய செலவு - 30,000₹ ஆக 6மாத காலத்தில் விவசாய குடும்பத்தாருக்கு #வருவாய் ₹.3,000 #செலவு ₹.95,000 யோசிக்காமல் விவசாயம் செய்யும் விவசாயிகளில் என் தந்தையின் விவசாய கணக்கு இது.. யோசி அல்லது யாசி 26/2/17 பரமு

மரபு விதைகளின் தாம்பூல பைகள் Return gift-native seeds

Image
தாம்பூலம் தாம்பூல_விதைப்பைகள் RETURN_GIFT NATIVE_SEEDS       திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது.. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூல பைகளில் கொடுத்து அனுப்பினர் ..                                                   கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த தாம்பூலங்களில் கொடுக்கப்படும் பொருட்களும் மாறுகின்றன. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது.. அதேபோல "திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் மரபு ரக விதைகளையும் கொடுப்பதன் மூலம் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்போருக்கும் எளிய வழியில் உள்ளூர் ரக விதைகளை கொண்டு போய் சேர்க்க முடியும். அதே சமயம் இவ்வாறு சுப நிகழ்வுகளில் கொடுப்பதன...