மரபு விதைகளின் தாம்பூல பைகள் Return gift-native seeds

தாம்பூலம்
தாம்பூல_விதைப்பைகள்
RETURN_GIFT
NATIVE_SEEDS

      திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது.. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூல பைகளில் கொடுத்து அனுப்பினர் ..
                                            
     கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த தாம்பூலங்களில் கொடுக்கப்படும் பொருட்களும் மாறுகின்றன. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது.. அதேபோல "திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் மரபு ரக விதைகளையும் கொடுப்பதன் மூலம் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்போருக்கும் எளிய வழியில் உள்ளூர் ரக விதைகளை கொண்டு போய் சேர்க்க முடியும். அதே சமயம் இவ்வாறு சுப நிகழ்வுகளில் கொடுப்பதன் மூலம் ஒரே சமயத்தில் அதிகப்படியான மக்களுக்கு விதைகள் சென்றடையும்" என நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த ஒன்றரை வருடங்களாக திருமணங்களுக்கு #திருமண_தாம்பூல_விதைகள் வழங்கி வருகிறோம். நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
      
        நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 10 நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதை பரிசுகளை படத்தில் உள்ளவாறோ அல்லது அவரவருக்கு தேவைப்படும்படியாகவோ தருகிறோம்.

#ஆதியகையின்_தாம்பூலம்

மேலும் தகவல்களுக்கு
8526366796 
பரமேஸ்வரன்.
ஒட்டன்சத்தரம்.

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY