Posts

Showing posts from November, 2022

தொய்யக்கீரை False amranthus

Image
#தொய்யக்கீரை #falseamaranthus கடைந்து உண்ண ஏற்ற கீரை. காட்டுக்கீரையாக வளரும். விவசாய நிலங்களில் வளரும் கீரையை களைச்செடியாக கருதி பிடுங்கி எறிகிறோம்.. இரசாயானங்கள் தெளிக்காத காடுகளில் உள்ள இக்கீரையை அறுவடை செய்து உண்ணலாம். #wild_amaranthus #greens #Keerai #weeds #wildfood #ஆதியகை #AADHIYAGAI நாட்டு ரக காய்கறி கீரை மூலிகை  விதைகள் தேவைக்கு +91 85263 66796  எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். நன்றி Paramez Aadhiyagai ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

citron pickle நாரத்தங்காய் ஊறுகாய்

Image
உங்களுக்கு செரிமானப்பிரச்னை இருக்கா, அந்தக் கவலையை விடுங்க, உணவுடன் நார்த்தாங்காய் ஊறுகாயை சாப்பிடுங்க. நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். நார்த்தங்காயில் உள்ள  வைட்டமின்-சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. வீட்டுமுறையில் செய்த ஊறுகாய் விற்பனைக்கு உள்ளது. ஊறுகாய் தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். #citron #pickle #நாரத்தங்காய் #ஊறுகாய் #homemade #வீட்டுமுறை 1கிலோ-400₹ 500கிராம்-210₹ 250கிராம்-120₹ நன்றி.. Paramez Aadhiyagai Aadhiyagai Foods

தாட்பூட்பழம் Passion Fruit

Image
தாட்பூட்பழம் சமவெளியில் வளருமான்னு ஒரு வீடியோ போட்டிருந்தேன்.. https://youtube.com/shorts/DWeP1E2YOrY?feature=share இதை பார்த்துட்டு கோயமுத்தூர்ல எப்படி வளர்ந்து காய்ப்பு கொடுத்துருக்கு பாருப்பான்னு போட்டோ அனுப்பியிருக்காரு!!!  #passionfruit #தாட்பூட்பழம்

வெள்ளை காந்தாரி மிளகாய் விதை சேகரிப்பு

Image
இன்றைய விதை சேகரிப்பு வெள்ளை காந்தாரி மிளகாய் விதை ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் Aadhiyagai Seedsavers Farm பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல் சேகரிப்பதும், நம்மை சுற்றிலுமுள்ள பாரம்பரிய விதைகளை சேகரிப்பதும், பாரம்பரிய விதைபெருக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்வதும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும், விதைகள் போன்றே நம்முடைய எளிய பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை பாதுகாப்பதும் எம்முடைய பணி.. இவை அனைத்தும் நம் அனைவருடைய பணியும் கூட.. நன்றி. Paramez Aadhiyagai ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் WhatsApp: +918526366796 Telegram: https://t.me/aadhiyagai Instagram @aadhiyagai_seedsavers Facebook: www.fb.com/AadhiyagaiBiodiversityAndEcologicalFarm 💛💛💛

மைசூர் விதை திருவிழா 2022

Image
மைசூர் விதை திருவிழா 2022  இந்திய அளவில் நடைபெறும் விதை திருவிழா மைசூரில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. மைசூரில் KARNATAKA STATE OPEN UNIVERSITY இல் நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற உள்ளது.  இந்த விதை திருவிழாவில் தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட விதை சேகரிப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த விதை திருவிழாவில் எண்ணற்ற விதை பன்மயத்தை காண இயலும். வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு பார்வையிடுங்கள். விதைகளை சேகரித்து பயன்பெறுங்கள்.  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில் நாமும் கலந்துகொள்கிறோம்.  நன்றி பரமு, ஆதியகை பண்ணை.