2023 தை பட்டத்திற்கு நாட்டு விதைகள்
தைபட்ட விதைப்பிற்கு பாரம்பரிய காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. விதைகள் பெறுவதற்கு www.aadhiyagai.co.in இணையவழியில் இனி விதைகள் பெறலாம். நன்றி ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் aadhiyagai seedsavers. நம் தமிழகத்தின் மரபு விதைகளை 2014 ஆம் ஆண்டு முதல் சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய விதை சேகரிப்பிற்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம். விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கொடுப்பதில்லை. வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே குறைந்த அளவில் விதைகள் கொடுக்கப்படுகிறது. அந்த பருவத்தில் விவசாயம் செய்ய கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைக...