Posts

Showing posts from June, 2024

வீட்டுத்தோட்டம் துவங்க அடிப்படையான விதை தொகுப்பு

Image
ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற 25 விதமான விதைகளின் தொகுப்பு. ஒரு செண்ட் இடத்தில் உள்ள வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தில் விதைப்பதற்கு இவை போதுமானதாக இருக்கும். 25 விதமான செடி காய்கறிகள், கொடிகாய்கறிகள், கீரைகள், மூலிகைகள் அடங்கிய விதை தொகுப்பு 300 ரூபாய் என வழங்குகிறோம்.  விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796   எண்ணிற்கு தங்களின் பெயர் முகவரி, தொடர்பு எண், மற்றும் 25 ரக விதைகள் அடங்கிய ஆடிபட்ட விதை தொகுப்பு தேவை என்று செய்தி அனுப்பவும்.  🌱🌱🌱🌱 Seeds list:  நாட்டு தக்காளி, நாட்டு கத்தரி, சம்பா மிளகாய், நாட்டு வெண்டை செடி காராமணி, கொத்தவரை, வெள்ளை முள்ளங்கி, செடிபீன்ஸ், நாட்டு பாகல், நாட்டு பீர்க்கன், நாட்டு புடலை, சுரை, பரங்கி, கொடி அவரை, மிதிபாகல், துளசி திருநீற்றுபச்சிலை, வெள்ளரி அரைக்கீரை சிறுகீரை தண்டங்கீரை புளிச்சைகீரை பாலக்கீரை சங்குபூ தூதுவளை ஆகிய விதைகள் அடங்கிய விதைதொகுப்பு பெறலாம். இவை ஒரு செண்ட் இடத்திற்குள் அமைக்கும் தோட்டத்திற்கு போதுமானது.  மேலும் 180ற்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் பெறுவதற்கு www.aadhiyagai.co.in இணைய பக்கத்தை காணலா...

மணப்பாறை கத்தரியின் சிறப்பு

Image
படத்தில்  மணப்பாறை கத்தரிக்காய் . இதனோடு மாங்காய், முருங்கை சேர்த்து சாம்பார் வைத்தால் ரெண்டு கரண்டி சோறு அதிகம் போகும். இதனோடு முருங்கையை பொடியாக வெட்டி சிறுபருப்பு சின்ன வெங்காயம் போட்டு டிபன்சாம்பார் வைத்தால் நாலு இட்லி எக்ஸ்ட்ராவா போகும். இதை மட்டன், சிக்கனோடு சேர்த்து  குழம்புவைத்தால் மஜாதான்.. மற்றபடி கொத்சு, சப்ஜி நிலகடலை சேர்த்து எண்ணைகத்தரி என்று எந்த டிஷ் செய்தாலும் சூப்பரப்பு.. -Artist ArjunKalai ****************************************** 1)மணப்பாறை கத்தரி 2) திண்டுக்கல் பச்சை நீள கத்தரி, 3) ஒட்டன்சத்திரம் பச்சை கத்தரி 4)கோவை வரி கத்தரி 5)பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி 6)ஈரோடு கண்ணாடி கத்தரி 7)வேலூர் முள்ளு கத்தரி 8)சிவகாசி வெள்ளை கத்தரி என பத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய கத்தரி வகைகளின் விதைகளை வழங்கி வருகிறோம். தங்களது பகுதிக்கான கத்தரி ரகங்களை, தாங்கள் முன்னர் ருசி பார்த்து பிடித்துப்போன கத்தரி ரகங்களின் விதைகளை பெற்று தோட்டத்தில் பயிரிட்டு ருசித்து பாருங்கள் நண்பர்களே!! பாரம்பரிய கத்தரி ரகங்களின் விதைகள் பெற வாட்ஸ்அப் செய்யலாம் 085263 66796  இணையத்தில் எளிதாக வ...

50 ரகமான மர விதைகள்

Image
 ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் வழங்கும் மரங்களின் விதைகள்.. விவசாய நிலத்தில் 30% மரங்களும், உயிர்வேலிகளும் இருந்தால் அந்த கிராமத்தில் தனியாக மரங்களை வளர்க்க முயற்சிக்க தேவையிருக்காது. குளக்கரை, உயிர்வேலிகளில் இருந்த பனை மரங்களை அணில் தங்குவதாகவெல்லாம் கூறி வெட்டி வீழ்த்தும் விவசாயிகளை காண முடிகிறது. பணப்பயிருக்கு மாறிய பின் தோட்டத்திற்குள் நிழல் வருவதாக உயிர்வேலிகளில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு கம்பிவேலிக்கு மாறியவர்கள் தான் நம் மக்கள். பக்கத்து வீட்டில் வளர்க்கும் மரத்தின் இலைகள் நம் வீட்டில் விழுந்தால் சண்டைக்கு செல்வதும் மரத்தை வெட்டும்படி குரல் உயர்த்துவதும் ஒரு வகையில் நம் வழக்கம். இப்படியான சூழலில் பசுமை இழந்து கொண்டிருக்கின்றோம் என உணரும் அனைவரும் மரங்களின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளோம். அந்தந்த பகுதிக்கான மரங்களை கண்டு அவற்றின் மரக்கன்றுகளையோ விதைகளையோ சேகரித்து வளர்ப்போம்.  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில்  சேகரித்த 40க்கும் மேற்பட்ட மரங்களின் விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்....

2024 ஆடிப்பட்ட விதைப்பிற்கான பாரம்பரிய விதைகள்

Image
ஆடிப்பட்ட விதைப்பிற்காக மரபு ரக விதைகள் தேவைப்படும் நண்பர்களுக்கு ...  06.06.2024 ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்  மூலமாக 180 ரகமான கீழ்க்காணும் மரபு விதைகள் / பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் வழங்குகிறோம். காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், தானியங்கள், பயிறு வகைகள், மரவிதைகள் இதில் அடங்கும். விதைகள் ஒரு பாத்தியில் விதைக்கும் அளவு சிறிதளவு இருக்கும்.. அவற்றில் இருந்து நாம் விதைபெருக்கம் செய்து விதைகள் சேமித்துக்கொள்ளலாம்.. பட்டியலில் உள்ள விதைகள் பெற  085263 66796  எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து பெறலாம். அல்லது www.aadhiyagai.co.in வெப்சைட்டிலும் பெறலாம்.  மேலும் ஆடி விதைப்பிற்காக 25 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு ஒன்றும் வழங்கி வருகிறோம்.  தக்காளி வகைகள்: •நாட்டு தக்காளி-செடி •காசி தக்காளி-கொடி •மதனபள்ளி தக்காளி •டோகோ தக்காளி •உருட்டு தக்காளி-கொடி •உருட்டு தக்காளி-செடி •பலவகை தக்காளி ரகங்கள் •குங்கும தக்காளி •மஞ்சள் காட்டு தக்காளி •கொத்து தக்காளி கத்தரி வகைகள்: •பச்சை கத்திரி •ஒடவை பச்சை கத்தரி •திண்டுக்கல் பச்சை கத்தரி •மணப்பாறை கத்தரி •வரி கத்தரி •புளியம்ப...