*One_cent_garden_for_one_family* ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்திற்கான காய்கறி தோட்டம்: -ஆதியகை ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறி தோட்டம் மாடியிலோ அல்லது நிலத்திலோ அமைத்துக்கொள்ளலாம். இந்த ஒரு செண்ட் இடத்தில் அமைத்துக்கொள்ளும் தோட்டம் வீட்டுத்தேவையை பூர்த்தி செய்யும். செடி காய்கறிகள், கொடி காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், மூலிகைகள், பூக்கள் என அன்றாட தேவைக்கான பயிர்களை கொண்ட காய்கறி தோட்டம் அமைத்து கொள்ளலாம். 2014ஆம் ஆண்டு இறுதியிலிருந்து வீட்டுத்தோட்டம் அமைத்து கொடுக்கும் வேலையை செய்து வருகின்றோம். தமிழகத்தின் எந்த பகுதியானாலும் நாங்கள் தோட்டம் அமைத்து கொடுக்கின்றோம். வீட்டுத்தோட்டத்தில் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதற்கு, 1)பொருட்களை சேகரிக்க வேண்டும் 2)சேகரித்த பொருட்களை கொண்டு தோட்டம் அமைக்க வேண்டும். 3)தோட்டம் அமைத்த பின் தினசரி பராமரிப்பு தேவை. இந்த விசயங்களில், 1)நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை கொண்டு தோட்டம் அமைக்க உதவுகிறோம். பொருட்களை சேகரிக்க உங்களால் இயலவில்லை என்றால் நாங்களே வருகிறோம். 2)தோட்டம் அமைத்து விதைத்து க...