Posts

Showing posts from 2017

தேயிலை தோட்டங்கள் கற்றுக்கொடுப்பது என்ன??

Image
தேயிலை தோட்டங்களை காணும்போதெல்லாம் என் கண்ணுக்கு தெரிவதெல்லாம்.. "என்ன அழகாக நடப்பதற்கென பாதையும் பயிரிட இடமும் என பிரித்திருக்கின்றார்கள் என்று தான். ஒரு பயிர் சாகுபடி முறை என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. நிரந்தரமான தோட்டமாக இருக்க வேண்டும் என்றால் விதைக்குமிடத்தில் மனிதனின் காலடி படக்கூடாது. அப்படியானால் நமது தோட்டத்திலும் இதுபோன்று செய்திட முடியும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை. Location specific என கூறுவது உண்மைதான். ஆனாலும் யாரும் முயற்சி கூடவா செய்யவில்லை. ஐந்து ஏக்கர் நிலத்தை அரை ஏக்கர் அளவில் வரப்பு கட்டி பிரித்தது போல ஒவ்வொரு அரை ஏக்கர் நிலத்தையும் 4அடி விதைப்பிற்கான இடமும், 2 அடி நடைபாதைக்கான இடமும் என பிரித்தால் அவ்விடத்திற்கு உழவு செய்வதறகான வேலை இருக்காதல்லவா.. விதையை போடுவோம்..யாராவது அறுவடை செய்வார்கள். விதைப்பும் அறுவடையும் செய்வதை மட்டுமே வேலையாக கொள்ள வேண்டுமென்ற இந்த சோம்பேறிக்கேற்றதை தானே தேடுவான்.. நிலத்தை உழவு செய்து விவசாயம் செய்வது அவசியமில்லை எனும் நிலை வர வேண்டும். அந்த நிலைக்கு நிலம் குப்பை காடாக மாற வேண்டும். அந்த நிலைக்கு நிலம் மாற வ

Do nothing farming என்றால் என்ன??

Image
Do nothing farming ஆ.. அப்படீனா என்னங்க.. உயிர்வே லிகள் இந்த முறைக்கு ஒரு உதாரணம்.. நாம் வளர்க்கும் பயிர்கள் ஓரிரு நாட்கள் தண்ணீர் இல்லையென்றாலே காய துவங்கிவிடும்.. ஆனால் தோட்டத்தை சுற்றிலும் இருக்கும் வேலியோ பசுமை மாறாமல் இருக்கும். வாரா வாரம் இந்த வேலிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பழக்கத்தை உருவாக்கி பாருங்கள்.. தோட்டத்திற்குள் இருக்கும் தென்னை மரங்களை போல வேலி பயிர்களும் தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் காய்ந்து போக தான் செய்யும். ஆனால் நாம் அவ்வாறான பழக்கத்தை. வேலிகளுக்கு பழக்கவில்லை.. தானாக வளர்ந்து பசுமையாக இருக்கும் இந்த உயிர்வேலிகளில் வாழும் பறவைகள், சிறு மிருகங்கள் மற்றும் காற்று மழை போன்றவற்றின் உதவியால் புது புது விதைகள் முளைத்து வேலியை பசுமையாக்குகின்றன.. அப்படியானால் தோட்டம் முழுவதும் வேலியை போல முள் மரங்களை வளர்க்க சொல்கிறீர்களா என கேட்காதீர்கள்.. வேலிகளை பார்த்து கற்று கொள்ள தான் சொல்கிறோம். நாம் அங்கே ஒன்றும் விதைப்பதில்லை..ஆனால் நமக்கு தேவையான அரிய மூலிகைகள், தாவரங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.. Do nothing farming என்பது நாம் தோட்டத்தில் பெரிதாக மெனக்

விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே..

Image
விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே.. மனிதன் சில நாட்கள் நடந்தாலே அவ்விடம் இறுகி போய் பாதையாகிவிடும். அப்படியிருக்க பயிர் செய்யும் இடத்தில் மிதித்தால் நிலம் இறுகிவிடாதா என்ன??.. மண் இறுகி போனால் நிலத்தை கொத்தி இலகுவாக்க வேண்டும். ஏக்கர் கணக்கில் இருக்கும் நிலமென்றால் உழவு தான் செய்ய வேண்டும்.. இதை தவிர்க்க என்ன செய்வது என யோசிப்போம்.. உழவிற்காக வருடா வருடம் எவ்வளவாயிரங்களை இழக்கின்றோம்.. உழவிற்காக காளைகளை வளர்க்கும் வரை நாம் செலவு ஏதும் செய்யாமல் தான் இருந்தோம். தற்போது இருக்கும் நிலை வேறு என்பது அனைவரும் அறிவோம். விதைப்பதற்கெனவும், நடப்பதற்கெனவும் நிலத்தை பிரிப்பது தான் நிரந்தர வேளாண்மையில் முதல் வேலையாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.. #எப்படி_பிரிப்பது?? 1மீ முதல் 4 அடி அகலத்தில் விதைப்பதற்கான பரப்பு..அ பாத்தி என எடுத்து கொள்வோம். 1.5  முதல் 2 அடி வரை நடப்பதற்கான பாதை என பிரித்து கொள்வோம். பாத்தியில் எந்தவொரு சூழ்நிலையிலும் மிதிக்க கூடாது. நடைபாதையில் விதைக்க கூடாது. இவ்வாறு நிலத்தை பிரித்து கொள்ளலாம். மேட்டுப்பாத்தியா, பள்ளபாத்தியா என்றெல்லா

Farming in sand (chennai palavakkam)

Image
சென்னை பாலவாக்கத்தில் ஒரு இடத்தில் தோட்டம் அமைக்க நண்பர் பாலமுருகனோடு சென்றிருந்தோம். அங்கே அந்த இடத்தை காவல் காக்க நேபாளத்தை சேர்ந்த ஒரு ஐயா இருந்தார். அவருடைய தோட்டத்தின் படங்களை தான் பதிவிட்டுள்ளேன். கடற்கரையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில் தான் இவருடைய தோட்டம். மணலாக உள்ள நிலத்தில் எப்படி விளைவிப்பது என்றெல்லாம் இவர் யோசிக்கவேயில்லை.. பயிரிட தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றிலும் கற்களை அடுக்கி மணல் சரியாமல் ஏற்பாடு செய்துவிட்டு மணலில் இலைதழைகளை புதைத்து தண்ணீர் ஊற்றிவருகிறார். பிறகு சில நாட்கள் கழித்து விதைப்பு செய்கிறார். நேபாளத்திலிருந்து ஒரு வகை கீரையை எடுத்து வந்து பயிரிட்டு உணவிற்கு பயன்படுத்துகிறார். ஒரு முறை பயிரிட்டால் பல மாதம் இலைகளை அறுவடை செய்யலாம் என்ற கீரை வகை அது. பாலக்கீரையை போல என நினைக்கின்றேன். கரும்பு, மக்காச்சோளம், பாகல், பசலைக்கீரை, தக்காளி,கத்தரி, மிளகாய், சக்கரைவள்ளி கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிட்டு உள்ளார். அவருடைய தக்காளி செடிகளை பாருங்களேன்..செடி மண்ணில் விழாதபடி அழகாக ஏற்பாடு செய்துள்ளார். மணல் என்பதால் தண்ணீர் நிற்பதில்லை.. அதனால் அவ்வபோது தண்ணீர் பிடித

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY

Image
பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY வரி பீர்க்கன்  (சாதாரண பீர்க்கன் தான், அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் ரகம்) வரி பீர்க்கன் -நீளம்  வரி பீர்க்கன் - குட்டை வரியில்லா பீர்க்கன்  (மெழுகு பீர்க்கன் போல இருக்கலாம், ஆனால் சாதாரண பீர்க்கன தான், சாதாரண பீர்க்கன் விதை போல தான் இருக்கும்) seed source: chatisgarh. வரியில்லா பீர்க்கன் மெழுகு பீர்க்கன் (சமைக்கலாம், விதை வெள்ளையாக இருக்கும், நார் உடல் தேய்த்து குளிக்கலாம், ஆனால் பேய் பீர்க்கன் நார் தான் பஞ்சு போல இருக்கும்) மெழுகு பீர்க்கன், நுரை பீர்க்கன் என பல பெயர். பேய் பீர்க்கன் அளவில் சிறியதாக இருக்கும். பேய் பீர்க்கன்  (காய் கசக்கும்., விதை கருப்பாக இருக்கும், உடம்பு தேய்க்கும் நாராக இதன் நாரை பயன்படுத்தலாம்) வெள்ளை விதைகள் மெழுகு பீர்க்கன் கருப்பு விதைகள் பேய் பீர்க்கன் வரியில்லா குட்டை பீர்க்கன்  (2-3 இஞ்ச்) நீளமுள்ள சிறிய அளவிலான பீர்க்கன். சாதாரண பீர்க்கன் போலவே சமைக்க பயன்படுத்தப்படுகிறது.  Seed source: chatisgarh சிட்டு பீர்க்கன் என பெயர் வைக்கலாமோ விதை சாதாரண பீர்

செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton

Image
செம்பருத்தி /மர பருத்தி/பல்லாண்டு பருத்தி/native cotton/pernial cotton 2014 ஆம் ஆண்டு இந்த ரக பருத்தியை பற்றி அறிந்து கொண்டோம். விதை சேகரித்து 2015 ஆம் ஆண்டு தோட்டத்தில் பயிரிட்டோம். தற்போது அனைவருக்கும் இதன் விதைகளை  கொடுத்து வருகிறோம். அளவில் சிறிய பருத்தி, பஞ்சு குறைவாக கிடைக்கின்றது. பல்லாண்டு காலம் வாழும் நிரந்தர பயிராகவும், வறட்சி தாங்கி வளரும் தாவரமாகவும், ஆடுகளுக்கு தீவனமாகவும் பருத்திப்பாலுக்கான நல்ல பருத்தி கொட்டை தரும் ரகமாகவும் கோவை ஈரோடு பகுதிகளில் பரவலாகவும் உள்ளது. கோயில்களில் வளர்க்கப்படுகிறது. விளக்கு போடும் திரியாக இதன் பஞ்சு பயன்படுத்தலாம். வீட்டுக்கு ஒரு செடி வளர்க்க முயல்வோம்.  தோட்டத்திற்கு வரும் உறவினர்கள் என்னப்பா, பூச்செடிகளை வளர்க்கறீங்களா, ரோசா பூத்திருக்கு அழகா இருக்கேப்பா..என கூறுவதும், பெண்களோ  புளிச்சை கீரை எவ்வளவு உயரமா போயிருக்கு பாரேன் என கூறுவதும் நிகழ்கிறது.  பெயரை கேள்விபட்டதும் செம்பருத்தியா..நாங்க பார்த்த செம்பருத்தி இப்படி இருக்காதே என கேட்டபோது, இதன் பெயர் தான் செம்பருத்தி.. நாம் செம்பருத்தி என அழைக்கும் பூச்செடியை செம்பரத்தை என அழைக்க வே

விதை முளைக்க வேண்டும்.

விதைகள் கேட்கும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழைமை அன்று விதைகள் அனுப்புகிறோம். சில வாரங்கள் வியாழன் அன்று அனுப்ப இயலுகிறது. புதன்கிழமை விதை அனுப்ப செவ்வாய்கிழமைக்குள் நண்பர்கள் விலாசம் அனுப்பினால் புதன் அன்று அனுப்ப இயலுகிறது. போன் எடுக்காத சூழலில் வாட்ஸ்அப் மூலம் தகவல் கொடுத்திடவும். பெயர் விலாசம் தேவைப்படும் விதைகள் தொடர்பு எண்ணை அனுப்பினால் எங்களிடமுள்ள காய்கறி விதைகளில் விதைப்பெருக்கம் செய்திட மட்டும் 10,20 விதைகள் தந்து வருகிறோம். நீங்கள் விதைகளை எங்கே சேகரித்தாலும் விதைப்பதற்கு முன் சில விசயங்களை செய்திடுவது நலம். விதைகளை முந்தைய நாள் எடுத்து வெளியில் காய வைத்து விடுங்கள். (வீட்டிற்குள்ளே கூட) மாலை முதல் காலை 10மணி வரை காய விடுங்கள். தக்காளி, கத்தரி,மிளகாய் போன்ற நா்று விடும் விதைகளை அரை மணி நேரம் வரையிலும், வெண்டை,கொத்தவரை,காராமணி போன்று சிறிய அளவு விதைகளை ஒரு மணி நேரம் வரையிலும், பாகல்,புடலை,சுரை,பூசணி போன்ற விதைகளை ஆறு மணி நேரம் வரையிலும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு விதைக்கவும். கொடி காய்கறி விதைகளை ஆறு மணி நேரம் ஊற வைத்து பிறகு முளைகட்டி வைத்து விதைக்கலாம். அல்லத

சுத்தம் செய்யும் ஒரு சிறந்த பொருள்

புளித்த மாவை தவிர உலகில் வேறேதும் சிறந்ததொரு சுத்தம் செய்யும் பொருள் இருக்க முடியாது... இட்லி தோசை மாவை பாத்திரம் கழுவ பயன்படுத்தினால் எவ்வளவு எண்ணெய் பிசுக்கு இருந்தாலும் பாத்திரம் பளிச்சென ஆகிவிடும்.. அதே சமயம் இந்த பாத்திரம் முறையில் பாத்திரம் கழுவிய தண்ணீரை வீட்டில் தோட்டம் வைத்திருப்போர் செடிகளுக்கு ஊற்றலாம்..மண் நன்கு வளமாகும்.. (அரிசி பருப்பு அலசிய தண்ணீரில் ஒரு முறை அலசிவிட்டு மறுமுறை சாதரண தண்ணீரில் அலசி கொள்ளலாம். இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.) கிராமத்தில் பாத்திரம் கழுவ சாம்பலை பயன்படுத்துவோம்.. நகரத்தில் வசிப்போருக்கு சாம்பல் கிடைக்கவில்லையென்றால் இட்லி தோசை மாவை பயன்படுத்தி கொள்ளலாம்.. இந்த மாவை உடலில் பூசிக்கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு தேய்த்து குளிக்கலாம்..உடலும் பளிச்சென்று இருக்கும்.. எல்லாமே சுய அனுபவம் தான்..

Greetings from Aadhiyagai

Friends, Greetings from Aadhiyagai!!! We are collecting heirloom seeds and sharing them to kitchen gardeners and farmers. You can avail below services from us #Heirloom_Seeds #Home_Gardening #School_Gardening #Complete_Training_for_setting_up_a_Home_Garden #Heirloom_Return_gift_Seeds_for_functions(THAAMBOOLA GIFTS in tamil) Now more than 110 variety Heirloom seeds(local variety seeds ) - ________*_________*______*_______*______*_________*___@ 4Type of tomatoes: • tomato(bush variety) • red Cherry tomato • Yellow cherry tomato_sweetness variety • blums tomato-vine variety 25variety brinjals include, • பச்சை கத்திரி-green brinjal • வரி கத்திரி-violet stripped brinjal • Dindigal violet brinjal • Manaparai brinjal • vellore violet brinjal • white brinjal • kumbakonam brinjal • Sevanthampatti brinjal • madurai violet brinjal * Nandhavan green long brinjal • Bitter gourd • small bitter gourd( momordica muricata) #10variety_bottle_gourd include • குடுவை சு

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke

Image
நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke முகநூல் பதிவிலிருந்து.. நருவள்ளியம்பழமரம் விரிசு மரம் நறுவல்லி மரம்: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 10ஆம் எண் முத்தூரில் Swathika Vinothkumar அவர்களின் தோட்டத்தில் பார்த்த மரம். வீட்டில் ஆண்குழந்தை பிறந்தாலே இந்த மரக்கன்றை நடவு செய்வார்களாம். கொத்து கொத்தாக பூக்கும் வெண்நிற பூவானது பச்சை நிற காயாகி பிறகு மணல் நிறத்தில் மெல்லிய தோலுள்ள பழமாகிவிடுமாம். பழமானது கோலிகுண்டு வடிவத்தில் உருண்டை பழமாக இருக்குமாம். ஆண்மை பெருக்கத்திற்காக இந்த பழங்களை பயன்படுத்துவதாக கூறினார்கள். இதனை பற்றி மேலும் தகவல் தெரிந்தால் பகிரவும்.. Siva Prakash yes this tree found in palghat pass area of kinathukadavu surroundings only...this is rare and this tree name is siru naruvalli  and also peru naruvalli tree is available..In Our farm nearly 100s of trees available... இந்த மரத்தின் பழம் இருதய ஓட்டை பிரச்சனை இருப்பவர்களுக்கு மருந்தாக பயன்படும். பறவைகளுக்கு மிகவும் பிடித்த பழம் பறவைகளின் எச்சத்தில் இதன் விதை பாகுபட்டு எளிதாக வளரும். கிள்ளி வளவன் : நருவ

15417 சென்னை மேடவாக்கத்தில் ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்

Image
ஒரு ஏக்கரில் அல்ல..ஒரு செண்ட் இடத்தில் ஒரு குடும்பத்தின் காய்கறி தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்ற ஒற்றை இலக்குடன் தான் எங்களின் பயணம் தொடர்கிறது..  நிரூபித்துவிட்டீர்களா.. சாத்தியமா என கேட்காதீர்கள்.. உங்களால் அதை சாத்தியப்படுத்த இயலும்.. தயவுகூர்ந்து முயன்று பாருங்கள்.. வெறுமனே 1செண்ட் இடத்தை நிலத்திலோ மாடியிலோ ஒதுக்கி தோட்டம் அமைத்து உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறி கீரைகளை மட்டும் அதில் உற்பத்தி செய்து பயன்படுத்துங்கள்.. தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.. தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறதே என்ற பதிலை தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.. அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கீரைகளின் பெயர்களையெல்லாம் பட்டியலிடுங்கள்.. நல்ல தரமான விதைகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை நன்கு வளமாக்கிக்கொண்டு விதைப்பு செய்திடுங்கள்.. மற்றதை பிறகு பார்ப்போம். நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்.. அறுவடை தினசரி இருக்க வேண்டுமல்லவா..அப்படியானால் விதைப்பும் தினசரி இருக்க வேண்டும்.. புரியவில்லையா.. 5வகை கீரைகளை 2சதுர அடி பரப்பிற்கு ஒரு ரக கீரை என விதைக்க வேண்டும். ஆனால் ஒரே நாளில் விதைக்காமல்

புதியதோர் உலகம் செய்வோம்

Image
பொதிகை தொலைக்காட்சியில் ஏப்ரல் 16ஞாயிறு இரவு 8.30 முதல் 9மணி வரையிலும், மறு ஒளிபரப்பு ஏப்ரல் 21 வெள்ளி மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஒளிபரப்பாகிறது. சுய உணவு தேவையை பூர்த்தி செய்திட வேண்டும்.அதுவே அனைத்திற்கும் ஆதாரம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இயங்குபவர்களை இந்த நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டியுள்ளார்கள். அரை மணி நேரம் தான் இந்த நிகழ்ச்சி என்றாலும் ஒரு முறை ஒளிபரப்பு செய்திட 80,000ரூ மற்றும் மறு ஒளிபரப்பிற்காக 30,000 என செலவு ஆகும். உலகின் பெரும்பாலான நாடுகளிலும் ஒளிபரப்பாகும். இந்த அரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திட பிரபு.MJ ஒரு தனிமனிதன் செய்த வேலைகளும் சந்தித்த நெருக்கடிகளும் ஏராளம்.. படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு எனக்கு பிடித்த வேலைகளையெல்லாம் தேடி செய்துகொண்டிருந்த சமயம்.. என்ன வேலை கிடைத்தாலும் செய்யவேண்டுமென தேடி கொண்டிருப்பேன். அந்த சமயத்தில் 2013இல் கிடைத்த முகநூலில் நண்பராக அறிமுகமானவர் "Prabu Mj" அண்ணா.. அவ்வபோது அழைத்து பேசுவார்.. நலம் விசாரிப்பார்.. ஒரு வழியாக விவசாயத்தில் விருப்பம் ஏற்பட்டு இதில் பயணப்பட துவங்கி ஒரு பாதை கிடைத்துவிட அவ்வப