எந்தெந்த விதைகளை எல்லாம் சேமிக்கலாம்.்
நாம் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் தாவர உணவுகளில் பெரும்பாலானவை நம் பகுதிக்கான உள்ளூர் ரகங்களாக இருப்பதில்லை. நிறைய உணவு பயிர்களின் பூர்வீகம் வெவ்வேறு நாடுகளாக இருக்கின்றன. இவை நம் உள்ளூர் ரகங்கள் இல்லை.. அதனால் இவற்றின் விதைகளை சேகரிக்க தேவையில்லை.. பயின்படுத்த தேவையில்லை என கூற இயலாது இல்லையா.. பழங்கால மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த போது காடுகளில் கிடைக்கும் உணவுகளை தங்களுக்கான உணவு என முதலில் அடையாளம் கண்டு கொண்டனர். பிறகு அவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அந்த தாவரங்களின் பழங்களை, காய்களை, தானியங்களை உணவாக உட்கொண்டுவிட்டு மீதமிருந்த விதைகளை தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு அருகிலேயே வீசி எறிந்தனர். அவை முளைத்து வந்து மீண்டும் தங்களின் உணவுகளை பூர்த்தி செய்தது. அதன் மூலமாக தாங்கள் சேகரித்து வந்த தாவரங்களின் பொருட்கள் தங்கள் உணவு தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. அவற்றிலிருந்து புதிதாக தாவரங்களையும் உருவாக்க முடியும், அவற்றை விதைப்பதன் மூலம் தங்களுக்கு அருகிலேயே அந்த உணவு கிடைக்கும் போன்ற அடிப்படைகளை உணர்ந்தனர். இவ்வாறாக உணர்ந்த பின்னரே, பின் நாட்களில் தங்களுக்கு என ...