Posts

மண்ணை வளப்படுத்தும் பலதானிய விதைகள்

Image
 பலதானிய விதைப்பு – மண் வளத்தை மீட்டெடுக்கும் எளிய வழி இன்று பல விவசாயிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மண் வளம் குறைவது. பல ஆண்டுகளாக இரசாயன உரங்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாலும், மண்ணில் கரிமப் பொருட்களை சேர்க்கும் பழக்கம் குறைந்ததாலும், பல இடங்களில் மண் தனது இயற்கை வளத்தை இழந்து வருகிறது. இதன் காரணமாக மண் இறுகுதல், நீர் பிடிப்புத் திறன் குறைதல், மண்புழுக்கள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குறைதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நிலங்களை மீண்டும் வளமாக மாற்ற உதவும் இயற்கை வேளாண் முறைகளில் முக்கியமானது பலதானிய விதைப்பு (Multi-Species Cover Cropping) ஆகும். நம் முன்னோர்கள் மண்ணை வளமாக வைத்திருக்க இலைதழைகள், கால்நடை எரு மற்றும் பசுந்தாள் உரங்களை மண்ணில் சேர்த்து உழவு செய்தனர். அதனால் மண் உயிரோட்டமாக இருந்தது. இன்று அந்த நடைமுறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டன. அந்தக் குறையை ஈடுசெய்யும் ஒரு எளிய வழியாக பலதானிய விதைப்பு முறை பயன்படுகிறது. இந்த முறையில் ஒரே வகை விதையை விதைப்பதற்குப் பதிலாக, தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பசுந்தாள் உ...

விதைகளின் முளைப்புத்திறன்

Image
வீட்டுத்தோட்டங்களில் புதிதாக தோட்டம் அமைக்கும் நண்பர்கள் அன்றாடம் கேட்கும் சந்தேகங்களுக்கு தீர்வுகளை வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியை இன்றும் காணலாம். ஒவ்வொரு  மாதமும் நடைபெறும் ஒரு மாத கால இணையவழி வீட்டுத்தோட்ட பயிற்சியில் இணைய +916380845836 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். மரபு காய்கறி விதைகள் பெற +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். www.aadhiyagai.co.in இணையதளத்தையும் பார்வையிடலாம்.  காய்கறிகளின் விதை முளைப்புத்திறன் (Seed Germination) என்பது ஒரு ஆரோக்கியமான நாற்றை உருவாக்க விதைக்கு இருக்கும் திறனாகும். இந்த முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டால், நாம் விதைக்கும் மொத்த விதைகளுக்கும் செடிகள் முளைக்காமல் போகலாம். 🌱 விதை முளைப்புத்திறனைப் பாதிக்கும் காரணிகளும் தீர்வுகளும் பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காணலாம்.  🌸 விதை சார்ந்த காரணிகள் (Internal Factors)  1)பழமையான மற்றும் வீரியமற்ற விதைகள் : விதைகள் சேமித்து வைக்கப்பட்ட காலம் அதிகமாக இருந்தால், அவற்றின் உள்ளிருக்கும் கருவளர்ச்சித் திறன் குறைந்துவிடும்.  💡 தீர்வு:  புதிய விதைகள்: எப்போதும் முந்தைய பர...

நிரந்தர வேளாண்மை பண்ணை வடிவமைப்பு Permaculture zones in farm

Image
 நிரந்தர வேளாண்மை பண்ணை வடிவமைப்பு Permaculture zones in farm விவசாய நிலத்தில், நிரந்தர வேளாண்மை செய்ய துவங்கும் போது, நிலத்தை அதற்கேற்றவாறு பிரித்து வேலை செந்ந வேண்டும். இந்த நிரந்தர வேளாண்மை முறையை புதிதான முறையாக நாம் எடுத்துக்கொள்ள தேவையில்லை. தோட்டத்திற்குள் நாம் குடியிருந்து வேளாண்மை செய்யும் பொழுது, அன்றாட பணிகளை எளிமையாக செய்வதற்காகவும், தொடர்ந்து ஓய்வின்றி வேலை செய்துகொண்டே இல்லாமல் இருப்பதற்காகவும் நாம் நிலத்தை பிரித்து வேலை செய்வதற்காக நிரந்த வேளாண் மண்டலங்கள் (Permaculture Zones) என பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் நிலத்தை, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பின் அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள முடியும். வீட்டின் அருகாமையில் அதிக கவனம் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பதில் தொடங்கி, வீட்டிலிருந்து தூரச் செல்லச் செல்ல பராமரிப்புத் தேவை குறையும் பகுதிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்பப் பயிரிடுதல் இதன் அடிப்படை. இந்த மண்டல அமைப்பு, ஆற்றல், நேரம் மற்றும் உழைப்பை திறம்படப் பயன்படுத்த உதவுகிறது. விவசாய நிலத்தில் நிரந்த வேளாண் மண்டலங்கள் permaculture zones ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகி...

பூந்திக்கொட்டை / பூவந்தி மரம் / சோப்புக்காய் மரம் Soapnut tree / Indian soapberry tree / washnut tree

Image
 பூந்திக்கொட்டை / பூவந்தி மரம் / சோப்புக்காய் மரம்  Soapnut tree / Indian soapberry tree / washnut tree இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும். சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மூலிகை மரம்தான் பூந்திக்கொட்டை மரம் எனும் மணிப் பூவந்தி மரம். கிராமங்களில், பூந்திக்கொட்டை மரம், பூவந்தி மரம், சோப்புக்காய் மரம் என்று அழைக்கப்படும் மணிப்பூவந்தி மரம், அடர்ந்த மலைப் பகுதிகளில் பரவலாக வளரக் கூடியது. தமிழகத்தின் ஆனைமலை, பழனி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளின் உயரமான இடங்களில் காணப்படும் மணிப்பூவந்தி மரம், பல ஆயிரம் ஆண்டு கால தொன்மையான பாரம்பரியம் கொண்ட, பழம்பெரும் மரங்களில் ஒன்றாகும். இந்த மரத்தின் இலைகள் சற்றே நீண்ட வடிவம் கொண்டவை, வெண்மை வண்ண மலர்கள் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். கோடைக் காலத்தில் காய்க்கும் இந்த மரத்தின் காய்கள் மற்றும் பழங்கள், மிக்க ம...

தோட்டம் துவங்க தேவையான 25 வகை மரபு விதை தொகுப்பு

Image
  ஜூன் முதல் அக்டோபர் வரையிலான விதைப்பிற்கு ஏற்ற 25 வகை நாட்டு விதைகளின தொகுப்பு ஆதியகை மரபு விதைகள் சேகரிப்பு மையம் சார்பில் வழங்கப்படுகிறது.  விதை பட்டியல்: நாட்டு தக்காளி, நாட்டு கத்தரி, சம்பா மிளகாய், நாட்டு வெண்டை, செடி காராமணி, கொத்தவரை, வெள்ளை முள்ளங்கி, செடிபீன்ஸ், நாட்டு பாகல், நாட்டு பீர்க்கன், நாட்டுபுடலை, சுரை, பரங்கி, கொடி அவரை, மிதிபாகல், மெழுகுபீர்க்கன், வெள்ளரி, அரைக்கீரை, சிறுகீரை, தண்டங்கீரை, புளிச்சைகீரை, பாலக்கீரை, முருங்கை, செண்டுமல்லி, சங்குப்பூ... 25 ரக விதைகள் அடங்கிய ஆடிப்பட்ட விதைபரிசு தொகுப்பு தபால் செலவுடன் சேர்த்து 300 ரூபாய். புதிதாக ஒரு வீட்டுதோட்டம் / மாடித்தோட்டம் துவங்க இந்த விதைகள் போதுமானதாக இருக்கும். விதைகள் பெறுவதற்கு வாட்ஸ்அப் செய்யவும் +918526366796 180 ரகமான காய்கறி கீரை மூலிகை மர விதைகள் என  பாரம்பரிய விதைகள் பெற https://www.aadhiyagai.co.in இணையதளத்தை காணவும்.  #aadipattam #traditionalseeds #aadhiyagaifarm

2025 ஆடிப்பட்ட விதைப்பிற்கு மரபு விதைகள்

Image
  ஆடிப்பட்ட விதைப்பிற்காக மரபு ரக விதைகள் தேவைப்படும் நண்பர்களுக்கு  பதிவு நாள்: 02.06.2025 ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்  மூலமாக 180 ரகமான கீழ்க்காணும் மரபு விதைகள் / பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் வழங்குகிறோம். காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், தானியங்கள், பயிறு வகைகள், மரவிதைகள் இதில் அடங்கும். விதைகள் ஒரு பாத்தியில் விதைக்கும் அளவு சிறிதளவு இருக்கும்.. அவற்றில் இருந்து நாம் விதைபெருக்கம் செய்து விதைகள் சேமித்துக்கொள்ளலாம்..  விதைகளை https://www.aadhiyagai.co.in இணையதளத்தில் பெறலாம். விதைகளை பெற 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தும் பெறலாம்.  வாட்ஸ்அப்பில் தங்களின் பெயர் முகவரி, தொடர்பு எண், தங்களுக்கு தேவைப்படும் விதைகளின் பட்டியல் அனுப்பினால் தபால் அல்லது கொரியர் மூலமாக தங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம்.  தக்காளி வகைகள்: •நாட்டு தக்காளி-செடி •காசி தக்காளி-கொடி •மதனபள்ளி தக்காளி •டோகோ தக்காளி •உருட்டு தக்காளி-செடி •பலவகை தக்காளி ரகங்கள் •குங்கும தக்காளி •காட்டு தக்காளி •கொத்து தக்காளி கத்தரி வகைகள்: •பச்சை கத்திரி •ஒடவை பச்சை கத்தரி •திண்டுக்கல் ...

ஆளுயர புடலை ரகங்கள்

Image
பாம்பு புடலை மற்றும் வரிப்புடலை ரகங்கள்:  7 முதல் 10 அடி நீளம் வரை வளரக்கூடியவை. பெருவணிக சந்தைக்கு உகந்ததாக இல்லை என்றாலும், உள்ளூர் சந்தைகளுக்கும் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுவதற்கும் ஏற்ற ரகமாக இருக்கும். காய் நன்கு முற்றி 7-9 அடி நீளம் வரையிலும் வளர்ந்த பின் தான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில்லை, ஒரு காய் நான்கைந்து அடி நீளம் வளர்ந்துவிட்டால் தங்கள் வீட்டு தேவைக்கு அந்த காய் போதும் என்றால் அந்த காயை அறுவடை செய்து வீட்டு தேவையை பூர்த்தி செய்யலாம். ஓரளவு முற்றும் முன்பே அறுவடை செய்து வந்தால், நிறைய காய்கள் காய்க்கும். ஒரு காயை நன்கு நீளமாக வளரும் வரை விட வேண்டும் என்றால், அடுத்தடுத்த காய்கள் காய்ப்பதற்கு தாமதமாகும், விளைச்சல் குறையும். விதைக்காக தேர்வு செய்யும் காயை மட்டும் பழமாகும் வரை கொடியிலேயே விட்டு பிறகு அறுவடை செய்து விதையை எடுக்கலாம். உணவுக்காக பிஞ்சாக அறுவடை செய்து நிறைய விளைச்சல் பெறலாம். நாட்டு ரக விதைகள் பெறுவதற்கு 085263 66796 என்ற எண்ணிற்கு whatsapp செய்யலாம் அல்லது www.aadhiyagai.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm

எந்தெந்த விதைகளை எல்லாம் சேமிக்கலாம்.்

Image
 நாம் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் தாவர உணவுகளில் பெரும்பாலானவை நம் பகுதிக்கான உள்ளூர் ரகங்களாக இருப்பதில்லை. நிறைய உணவு பயிர்களின் பூர்வீகம் வெவ்வேறு நாடுகளாக இருக்கின்றன. இவை நம் உள்ளூர் ரகங்கள் இல்லை.. அதனால் இவற்றின் விதைகளை சேகரிக்க தேவையில்லை.. பயின்படுத்த தேவையில்லை என கூற இயலாது இல்லையா..  பழங்கால மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த போது காடுகளில் கிடைக்கும் உணவுகளை தங்களுக்கான உணவு என முதலில் அடையாளம் கண்டு கொண்டனர். பிறகு அவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அந்த தாவரங்களின் பழங்களை, காய்களை, தானியங்களை உணவாக உட்கொண்டுவிட்டு மீதமிருந்த விதைகளை தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு அருகிலேயே வீசி எறிந்தனர். அவை முளைத்து வந்து மீண்டும் தங்களின் உணவுகளை பூர்த்தி செய்தது. அதன் மூலமாக தாங்கள் சேகரித்து வந்த தாவரங்களின் பொருட்கள் தங்கள் உணவு தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. அவற்றிலிருந்து புதிதாக தாவரங்களையும் உருவாக்க முடியும், அவற்றை விதைப்பதன் மூலம் தங்களுக்கு அருகிலேயே அந்த உணவு கிடைக்கும் போன்ற அடிப்படைகளை உணர்ந்தனர். இவ்வாறாக உணர்ந்த பின்னரே, பின் நாட்களில் தங்களுக்கு என ...

வீட்டுத்தோட்டம் துவங்க அடிப்படையான விதை தொகுப்பு

Image
ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற 25 விதமான விதைகளின் தொகுப்பு. ஒரு செண்ட் இடத்தில் உள்ள வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத்தில் விதைப்பதற்கு இவை போதுமானதாக இருக்கும். 25 விதமான செடி காய்கறிகள், கொடிகாய்கறிகள், கீரைகள், மூலிகைகள் அடங்கிய விதை தொகுப்பு 300 ரூபாய் என வழங்குகிறோம்.  விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796   எண்ணிற்கு தங்களின் பெயர் முகவரி, தொடர்பு எண், மற்றும் 25 ரக விதைகள் அடங்கிய ஆடிபட்ட விதை தொகுப்பு தேவை என்று செய்தி அனுப்பவும்.  🌱🌱🌱🌱 Seeds list:  நாட்டு தக்காளி, நாட்டு கத்தரி, சம்பா மிளகாய், நாட்டு வெண்டை செடி காராமணி, கொத்தவரை, வெள்ளை முள்ளங்கி, செடிபீன்ஸ், நாட்டு பாகல், நாட்டு பீர்க்கன், நாட்டு புடலை, சுரை, பரங்கி, கொடி அவரை, மிதிபாகல், துளசி திருநீற்றுபச்சிலை, வெள்ளரி அரைக்கீரை சிறுகீரை தண்டங்கீரை புளிச்சைகீரை பாலக்கீரை சங்குபூ தூதுவளை ஆகிய விதைகள் அடங்கிய விதைதொகுப்பு பெறலாம். இவை ஒரு செண்ட் இடத்திற்குள் அமைக்கும் தோட்டத்திற்கு போதுமானது.  மேலும் 180ற்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் பெறுவதற்கு www.aadhiyagai.co.in இணைய பக்கத்தை காணலா...

மணப்பாறை கத்தரியின் சிறப்பு

Image
படத்தில்  மணப்பாறை கத்தரிக்காய் . இதனோடு மாங்காய், முருங்கை சேர்த்து சாம்பார் வைத்தால் ரெண்டு கரண்டி சோறு அதிகம் போகும். இதனோடு முருங்கையை பொடியாக வெட்டி சிறுபருப்பு சின்ன வெங்காயம் போட்டு டிபன்சாம்பார் வைத்தால் நாலு இட்லி எக்ஸ்ட்ராவா போகும். இதை மட்டன், சிக்கனோடு சேர்த்து  குழம்புவைத்தால் மஜாதான்.. மற்றபடி கொத்சு, சப்ஜி நிலகடலை சேர்த்து எண்ணைகத்தரி என்று எந்த டிஷ் செய்தாலும் சூப்பரப்பு.. -Artist ArjunKalai ****************************************** 1)மணப்பாறை கத்தரி 2) திண்டுக்கல் பச்சை நீள கத்தரி, 3) ஒட்டன்சத்திரம் பச்சை கத்தரி 4)கோவை வரி கத்தரி 5)பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி 6)ஈரோடு கண்ணாடி கத்தரி 7)வேலூர் முள்ளு கத்தரி 8)சிவகாசி வெள்ளை கத்தரி என பத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய கத்தரி வகைகளின் விதைகளை வழங்கி வருகிறோம். தங்களது பகுதிக்கான கத்தரி ரகங்களை, தாங்கள் முன்னர் ருசி பார்த்து பிடித்துப்போன கத்தரி ரகங்களின் விதைகளை பெற்று தோட்டத்தில் பயிரிட்டு ருசித்து பாருங்கள் நண்பர்களே!! பாரம்பரிய கத்தரி ரகங்களின் விதைகள் பெற வாட்ஸ்அப் செய்யலாம் 085263 66796  இணையத்தில் எளிதாக வ...

50 ரகமான மர விதைகள்

Image
 ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் வழங்கும் மரங்களின் விதைகள்.. விவசாய நிலத்தில் 30% மரங்களும், உயிர்வேலிகளும் இருந்தால் அந்த கிராமத்தில் தனியாக மரங்களை வளர்க்க முயற்சிக்க தேவையிருக்காது. குளக்கரை, உயிர்வேலிகளில் இருந்த பனை மரங்களை அணில் தங்குவதாகவெல்லாம் கூறி வெட்டி வீழ்த்தும் விவசாயிகளை காண முடிகிறது. பணப்பயிருக்கு மாறிய பின் தோட்டத்திற்குள் நிழல் வருவதாக உயிர்வேலிகளில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு கம்பிவேலிக்கு மாறியவர்கள் தான் நம் மக்கள். பக்கத்து வீட்டில் வளர்க்கும் மரத்தின் இலைகள் நம் வீட்டில் விழுந்தால் சண்டைக்கு செல்வதும் மரத்தை வெட்டும்படி குரல் உயர்த்துவதும் ஒரு வகையில் நம் வழக்கம். இப்படியான சூழலில் பசுமை இழந்து கொண்டிருக்கின்றோம் என உணரும் அனைவரும் மரங்களின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளோம். அந்தந்த பகுதிக்கான மரங்களை கண்டு அவற்றின் மரக்கன்றுகளையோ விதைகளையோ சேகரித்து வளர்ப்போம்.  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பில்  சேகரித்த 40க்கும் மேற்பட்ட மரங்களின் விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்....

2024 ஆடிப்பட்ட விதைப்பிற்கான பாரம்பரிய விதைகள்

Image
ஆடிப்பட்ட விதைப்பிற்காக மரபு ரக விதைகள் தேவைப்படும் நண்பர்களுக்கு ...  06.06.2024 ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்  மூலமாக 180 ரகமான கீழ்க்காணும் மரபு விதைகள் / பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் வழங்குகிறோம். காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், தானியங்கள், பயிறு வகைகள், மரவிதைகள் இதில் அடங்கும். விதைகள் ஒரு பாத்தியில் விதைக்கும் அளவு சிறிதளவு இருக்கும்.. அவற்றில் இருந்து நாம் விதைபெருக்கம் செய்து விதைகள் சேமித்துக்கொள்ளலாம்.. பட்டியலில் உள்ள விதைகள் பெற  085263 66796  எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து பெறலாம். அல்லது www.aadhiyagai.co.in வெப்சைட்டிலும் பெறலாம்.  மேலும் ஆடி விதைப்பிற்காக 25 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு ஒன்றும் வழங்கி வருகிறோம்.  தக்காளி வகைகள்: •நாட்டு தக்காளி-செடி •காசி தக்காளி-கொடி •மதனபள்ளி தக்காளி •டோகோ தக்காளி •உருட்டு தக்காளி-கொடி •உருட்டு தக்காளி-செடி •பலவகை தக்காளி ரகங்கள் •குங்கும தக்காளி •மஞ்சள் காட்டு தக்காளி •கொத்து தக்காளி கத்தரி வகைகள்: •பச்சை கத்திரி •ஒடவை பச்சை கத்தரி •திண்டுக்கல் பச்சை கத்தரி •மணப்பாறை கத்தரி •வரி கத்தரி •புளியம்ப...

2024 சித்திரை பட்ட விதை தொகுப்பு

Image
சித்திரை பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற விதைகளின் தொகுப்பு  summer combo pack for gardeners 🌱🌱🌱🌱 விதைகளின் பட்டியல்:  •நாட்டு தக்காளி •நாட்டுகத்தரி •சம்பா மிளகாய் •நாட்டு வெண்டை •முள்ளங்கி •காராமணி •கொத்தவரை •குட்டைபீர்க்கன் •மிதிபாகல் •பாகல் •குட்டைபுடலை •வெள்ளரி •புளிச்சைகீரை •வெந்தயக்கீரை •அரைக்கீரை •சிறுகீரை •தண்டுகீரை •பாலக்கீரை •அகத்திகீரை •முருங்கை •திருநீற்றுபச்சிலை •சங்கு பூ •செடி அவரை •செடி பீன்ஸ் •சுக்காங்கீரை 25 ரகமான விதைகள் அடங்கிய விதை தொகுப்பு கொரியர் செலவுடன் 300₹. விதை தொகுப்பு பெறுவதற்கு 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். அல்லது www.aadhiyagai.co.in என்ற வெப்சைட்டிலும் பெறலாம்.  விதைகளை தண்ணீர் தேங்காத, நல்ல வடிகால்வசதியுள்ள மண்ணில் பயிரிடுவது அவசியம்.  விதைகளுடன் விதைப்பும் பராமரிப்பும் சார்ந்த குறிப்புகளும் கிடைக்கும். அந்த குறிப்புகளில் உள்ளபடி விதைகளை நீர் அல்லது பால், பஞ்சகவ்யம் போன்று எதாவது ஒன்றில் ஊறவைத்து மாலை வேளைகளில் வெயில் குறைந்தவுடன் விதைப்பு செய்யலாம்.  நன்றி 🌱🌱🌱🌱 Aadhiyagai Seedsavers Farm  ஆதிய...

வெயில் காலத்தில் விதைப்பதற்கான விதை தொகுப்பு summer seed combo

Image
மார்ச் முதல் மே வரை விதைப்பதற்கு ஏற்ற விதைகளின் தொகுப்பு  summer combo pack for gardeners 🌱🌱🌱🌱 விதைகளின் பட்டியல்:  •நாட்டு தக்காளி •நாட்டுகத்தரி •சம்பா மிளகாய் •நாட்டு வெண்டை •முள்ளங்கி •காராமணி •கொத்தவரை •குட்டைபீர்க்கன் •மிதிபாகல் •பாகல் •குட்டைபுடலை •வெள்ளரி •புளிச்சைகீரை •வெந்தயக்கீரை •அரைக்கீரை •சிறுகீரை •தண்டுகீரை •பாலக்கீரை •அகத்திகீரை •முருங்கை •திருநீற்றுபச்சிலை •சங்கு பூ •செடி அவரை •செடி பீன்ஸ் •சுக்காங்கீரை •மரதுவரை-நிழலுக்காக •மக்காசோளம் -நிழலுக்காக 27 ரகமான விதைகள் அடங்கிய விதை தொகுப்பு கொரியர் செலவுடன் 300₹. விதை தொகுப்பு பெறுவதற்கு 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். அல்லது www.aadhiyagai.co.in என்ற வெப்சைட்டிலும் பெறலாம்.  (Gpay/phonepe/paytm- 8526366796) விதைகளை தண்ணீர் தேங்காத, நல்ல வடிகால்வசதியுள்ள மண்ணில் பயிரிடுவது அவசியம்.  விதைகளுடன் விதைப்பும் பராமரிப்பும் சார்ந்த குறிப்புகளும் கிடைக்கும். அந்த குறிப்புகளில் உள்ளபடி விதைகளை நீர் அல்லது பால், பஞ்சகவ்யம் போன்று எதாவது ஒன்றில் ஊறவைத்து மாலை வேளைகளில் வெயில் குறைந்தவுடன் விதைப்பு செய்...

30 நாட்கள் இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி

Image
  புதிதாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் துவங்கும் நண்பர்களுக்காக ஒரு மாதகால இணையவழி வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி வாட்ஸ்அப் மூலமாக எளிய முறையில் இருபது தலைப்பின்கீழ் 30 நாட்கள் நடைபெறும். பயிற்சி 2024 ஏப்ரல் -1 முதல் துவங்கும். பயிற்சிக்கான பங்களிப்பு தொகை 1000₹. பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமிருப்போர் 085263 66796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி  மூலம் உறுதி செய்யவும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தோட்டம் துவங்க தேவையான அடிப்படையான 20 மரபு ரக காய்கறி ரகங்களின் விதைகள் வழங்கப்படும். இந்த 20 ரக விதைகளில் இருந்து மீண்டும் நாமே விதைகளை எடுத்து கொள்ள இயலும். அதற்காக விதை சேமிப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படும். 100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் .. நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இ...

பாரம்பரிய விதைகள் பரவலாக்கும் எளிய முறை

Image
தம்பி போன வருசம் பத்து விதை வாங்குனேன்.. வீட்டில் விதைச்சதுல நல்லா கொடி காய்ச்சுது..  காயும் நல்ல ருசி.. சுற்றி இருக்குறவங்களுக்கும் கொடுத்தோம்..நம்ம காய்க்கு நல்ல வரவேற்பு..  ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து 20 செண்டுல விதைச்சு சுத்தி இருக்குற கடைகளுக்கெல்லாம் கொண்டு வந்து கொடுத்தட்றோம்..  பக்கத்து தோட்டத்துக்காரரும் விதை கேட்டிருக்காரு.. பத்து விதை கொடுத்துருக்கேன் யா..   ரொம்ப சந்தோசம்ங்க ஐயா.. இது தான் பாரம்பரிய விதைகளை பரவலாக்குற முறை..  பாரம்பரிய விதைகளை பரவலாக்கம் செய்ய நம்ம சிபாரிசு செய்யும் முறையும் இதுதான்..  நன்றி Paramez Aadhiyagai  Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

ஆதியகையின் விதை பரிசு

Image
இந்த வருசம் ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் சார்பாக புதிதாக வீட்டுத்தோட்டம் துவங்கும் ஆயிரம் பேருக்கு 60ரூபாய் விதை தொகுப்பு தொகுப்பு கொடுக்க நினைத்தோம். நானூறுக்கும் மேற்பட்டோருக்கு அனுப்பிவிட்டோம். வரும் மாதத்தில் மீதமுள்ள விதை தொகுப்புகளையும் வழங்கிவிடுவோம்..  வரக்கூடிய ஜூன் 15க்கு பிறகு நம்மிடம் விதை கேட்கும் நண்பர்களுக்கு ஒரு விதை பரிசு ஒன்றை வழங்க திட்டமிட்டு உள்ளோம். அதன்படி ஒரு விதைபரிசு அவர்களுக்கு கொடுத்து புதிதாக வீட்டுத்தோட்டம் துவங்குபவர்களுக்கு அவர்கள் சார்பாக பரிசளிக்கும்படி வழங்கவுள்ளோம்.  நன்றி..  Paramez Aadhiyagai  Aadhiyagai Seedsavers Farm

புதிதாக தோட்டம் துவங்கும் நண்பர்களுக்கு ஆடிபட்ட விதைகள் 60ரூபாய் மட்டும்..

Image
வரக்கூடிய 2023 ஆடிபட்டத்திற்கு மரபு விதைகள் வழங்குவதற்கு தயாராகிறோம் நண்பர்களே!!  15 ரக விதைகள் அடங்கிய ஒரு விதை தொகுப்பு 60₹ க்கு புதிதாக தோட்டம் துவங்கும் விவசாயிகள், வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு வழங்குவதற்கு தயாராகிறோம். ஒரு செண்ட் அளவு தோட்டத்திற்கு இந்த விதைகள் போதுமானதாக இருக்கும்.  நாட்டு ரக தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, சுரை, பரங்கி, அவரை, தண்டங்கீரை, வெண்பூசணி, வெள்ளரி போன்றவற்றில் 15 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு இருக்கும்.  மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும், நிலத்தில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும் இதிலுள்ள விதை தொகுப்பு தயார் செய்கிறோம்.  குழுவாக உள்ள விவசாயிகளுக்கு, வீட்டுத்தோட்ட குழுக்களுக்கு மொத்தமாக தேவைபட்டால் 50₹ என வழங்குகிறோம். (100 பேருக்கு வாங்கும்போது) மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் அல்லது அழைக்கவும்.  தொடர்புகொள்ள எண்: +918526366796  தங்களுக்கு தேவையான விதைகள் பெற www.aa...

ஆடி பட்ட விதைப்பிற்கு 60 ரூபாய்க்கு 15 ரக விதை தொகுப்பு

Image
வரக்கூடிய 2023 ஆடிபட்டத்திற்கு மரபு விதைகள் வழங்குவதற்கு தயாராகிறோம் நண்பர்களே!! 15 ரக விதைகள் அடங்கிய ஒரு விதை தொகுப்பு 60₹ க்கு புதிதாக தோட்டம் துவங்கும் விவசாயிகள், வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு வழங்குவதற்கு தயாராகிறோம். ஒரு செண்ட் அளவு தோட்டத்திற்கு இந்த விதைகள் போதுமானதாக இருக்கும். நாட்டு ரக தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, சுரை, பரங்கி, அவரை, தண்டங்கீரை, வெள்ளரி போன்றவற்றில் 15 ரக விதைகள் அடங்கிய விதை தொகுப்பு இருக்கும். மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும், நிலத்தில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறும் இதிலுள்ள விதை தொகுப்பு தயார் செய்கிறோம். குழுவாக உள்ள விவசாயிகளுக்கு, வீட்டுத்தோட்ட குழுக்களுக்கு மொத்தமாக தேவைபட்டால் 50₹ என வழங்குகிறோம். (100 பேருக்கு வாங்கும்போது) மேலும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் அல்லது அழைக்கவும். தொடர்புகொள்ள எண்: +918526366796 தங்களுக்கு தேவையான விதைகள் பெற www.aadhiyagai.co.in வெப்சைட்டில் பார்க்கவும். நன்றி Paramez Aadhiyagai Aadhiyagai Seedsavers Farm ஆத...

மஞ்சள் விதை

Image
•மஞ்சள் விதைகிழங்கு, •கஸ்தூரி மஞ்சள் விதைகிழங்கு, •மாஇஞ்சி விதைகிழங்கு  விதை தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். நாட்டு ரக காய்கறி கீரை மூலிகை விதைகள் தேவைப்படும் நண்பர்கள் நம்முடைய ஆதியகை வெப்சைட்டில் www.aadhiyagai.co.in ஆர்டர் செய்யலாம்.  நன்றி.. Aadhiyagai Paramez  Aadhiyagai Seedsavers Farm  ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்